விண்வெளியில் உலா
கண்ணுக்குத் தெரியும் விண்வெளியின் எல்லைக்குள் மிகவும் பிரகாசமாகத் தோன்றும்.விண்மீன் சிரியஸ்ஸாகும்.பிரகாசம் மிக்க 20 விண்மீன்களுள் முதலாவதும் இதுவேயாகும்.1 யை ஒளிப் பொலி வெண்ணாகக் கொண்ட ஒரு படித்தர விண்மீனை விடசீரியஸ் 9 மடங்கு பிரகாசமானது .நீண்ட காலமாக இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் ணை- 1.6 எனக் குறிப்பிட்டுப் பயன் படுத்தி வந்தனர். ஆனால் துல்லியமான கணக்கீடுகள் இதன் ஒளிப் பொலி வெண் - 1.42 எனத் தெரிவித்துள்ளன. தோற்ற ஒளிப் பொலி வெண் களைக் கொண்டுஇரு விண்மீன்களின் பிரகாசங்களை ஒப்பிட முடியாது இதற்காக வானவியலார் சார்பிலாஒளிப் பொலி வெண் ணை வரையறுத்தனர். இதன் படி விண்மீன்கள் 10 பார்செக்(32.6 ஒளி ஆண்டுகள்) தொலைவில் இருக்கும் போது அவற்றின் ஒளிப் பொலி வெண் களைக் குறிப்பிடுவதாகும். சிரியஸின் சார்பிலா ஒளிப் பொலி வெண் 1 .3 ,சூரியனின் சார்பிலா ஒளிப் பொலி வெண் 4.7 ,அதாவது 10 பார்செக் தொலைவில் இவ்விரு விண்மீன்களும் இருந்தால் சூரியன் ,சிரியஸ்ஸை விட 25 மடங்கு மங்கலாகத் தெரியும் .சிரியஸின் பிரகாசம் வரம்பு மீறியதாக இல்லை. இது மிக அருகில் இருப்ப தால் கண்ணுக்குத் தெரியும் எல்லா விண்மீன்களைக் காட்டிலும் பிரகாசமானது போலக் காட்சியளிக்கிறது இது 8.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் வெண்மையாகத் தோன்றுகிறது.சூரியன் போல தொடுவானத்தில் நிறங் கொண்டது போலக் காட்சி தருகிறது. இது உண்மையில் நிற மாற்றத்தால் விளைவதில்லை .பூமியின் வளி மண்டலத்தில் ஏற்படும் ஒளிப் பகுப்பால் ஏற்படுவதாகும். இதனால் பழங் காலத்தில் வானவியலாருக்கு குழப்பத்தை தந்தது. சிலி நாட்டு வானவியலார் கனோபஸ் என்ற விண்மீன் சிரியஸ்ஸை விட பிரகாசமானது எனத் தவறாக முடிவு செய்தனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு கனோபஸ் உச்சி வானிலும் சீரியஸ் அடி வானத்திலும் காட்சி யளித்ததே யாகும்.
சிரியஸ்,சூரியனை விடப் பெரியது. அதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 1.8 மடங்கு ,அதன் நிறை சூரியனைப் போல 2.35 மடங்கு.சிரியஸின் புறப்பரப்பு வெப்பநிலை 10,௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது. நமக்கு அருகாமையில் இருக்கும் விண்மீன் களுள் இது ஐந்தாவதாகும்.வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தோன்றும் விண்மீன் களுள் ஆல்பா சென்டாரியை அடுத்து அருகில் உள்ளது சிரியஸ்ஸே ஆகும்
பூமியின் வட கோளத்தில் நடு வரைக் கோட்டிற்கு விலகியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு ஆல்பா சென்டாரியைப் பார்க்க முடிவதில்லை.
ஆல்பா சென்டாரியைப் போல வே சிரியசும் தனி விண்மீனில்லை .ஒரு மங்கலான துணை விண்மீனைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீன் .இதை சிரியஸ் A,சிரியஸ் B என அழைப்பார்கள்.சிரியஸ் B ஒரு குட்டி விண்மீன் என்றும் ,குறு விண்மீன் என்றும் அறிந்துள்ளனர். இது சிரியஸ் A யை விட 10 ,௦௦௦ மடங்கு மங்கலானது .
சிரியஸின் தொலைவு
அண்ட வெளியில் விண்மீன் களின் தொலைவைக் கண்டறிய முயன்ற போது, முதன் முதலாக மதிப்பீடு செய்யப் பட்டது சிரியஸ் விண்மீனின் தொலைவாகும். டச்சு நாட்டு வான வியலாரான கிருஸ்டியன் ஹைஜென்ஸ் 1660 ல் ஓர் எளிய சோதனை மூலம் இதைச் செய்து காட்டினார். பித்தளையாலான ஒரு தகட்டில் பல அளவுகளில் துளைகளை இட்டு அதைச் சூரியனுக்கு முன்னிருத்தி எத் துளை சிரியஸ் போல பிரகாசம் தருவதாக இருக்கிறது என்பதை முதல் நாள் இரவு சிரியஸ்ஸை ஆராய்ந்து பார்த்த அனுபவத்தைக் கொண்டு அறிந்தார். அத் துளை சூரியனின் தோற்ற உருவ அளவில் 28000 ல் ஒரு பங்காய் இருந்தது.அதன் மூலம் சிரியஸ் 28000 வானியல் அலகுத் தொலைவில் இருக்கிறது எனக் கணக்கிட்டு அறிந்தார்,ஒரு வானியல் தொலைவு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும். இது சுமார் 150 மில்லியன் கிலோமீட்டருக்கும் ௦.44 ஒளி ஆண்டுத் தொலைவிற்கும் சமம். இம் மதிப்பீட்டை,சூரியன் மற்றும் சிரியஸ் இரண்டிற்கும் சமமான
உள்ளார்ந்த பிரகாசத்தைப் பெற்றுள்ளன. என்ற அடிப்படையில் பெற்றார். அவர் காலத்தில் ஸ்டீபன் விதி நிறுவப்படவில்லை என்பதால் ஒரு விண்மீன் தன் ஓரலகுப் புறப்பரப்பின் வழியாக வீசும் மொத்த ஆற்றல் ,அதன் சார்பிலா வெப்ப நிலையின் நான்காவது மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது என்பது பற்றி அறியாதிருந்தனர். நிறமாலை ஆய்வுகள் மூலம் .சிரியஸின் புற வெப்ப நிலை 10,௦௦௦ டிகிரி கெல்வின் என்றும் சூரியனுக்கு இது 6000 டிகிரி கெல்வின் என்றும் தெரிந்து கொண்டனர். இது .சிரியஸின் ஒவ்வொரு அலகுப் பரப்பும் சூரியனை விட 7.7 மடங்கு ஆற்றலை வெளியேற்றுகிறது எனத் தெரிவிக்கிறது. இதன் ஆரத்தை 1.8 சூரிய ஆரம் எனக் கொண்டால் ,இதன் பரப்பு சூரியனை விட 3.24 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே சிரியஸ் சூரியனை விட 25 மடங்கு பிரகாசமிக்கது என்று கூறலாம்..இதை ஒரு திருத்தமாகக் கணக்கீட்டில் கொண்டால் சிரியஸின் தொலைவு 11 ஒளி ஆண்டுகள் என்பதைப் பெறலாம். பின்னர் ஹைஜென்ஸ் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்தி துளையில் விழும் சூரிய ஒளியின் அளவை மட்டுப்படுத்தினார். மேலும் பகல் பொழுதின் அதிக ஒளி காரணமாக கண்மணி சுருங்கி இருப்பதால் ,அதற்காக ஒரு திருத்தத்தையும் மேற்கொண்டு 8.6 ஒளி ஆண்டுகள் என்று இன்று உறுதி செய்யப்பட்ட அதே அளவை அன்றே கண்டறிந்தார்.
No comments:
Post a Comment