வேதித் தனிமங்கள்.
சோடியம் (sodium)
கண்டுபிடிப்பு
சோடியம் பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன்,சிலிகான்,அலுமினியம்,இரும்பு கால்சியத்திற்கு அடுத்து ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 % சோடியமாகும் இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப் படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது.உப்புப் பாறையாக(Rock salt) பூமியில் பல விடங்களில் கிடைக்கிறது பல உப்பு நீர் ஏரிகளிலும்,சுனை,ஊற்றுக்களிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது.
1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்ப்ரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப் பதில் வெற்றி கண்டார்.தெவிட்டிய கரைசலில் நீர்,உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கி சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று,அதிலிருந்து மின்னார் பகுப்பு மூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார்.
சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 % கால்சியம் குளோரைடையும் சேர்த்து,செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னார் பகுப்பு மூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகு நிலை
1077 K ,கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது.
பண்புகள்
இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது. இதன் வேதிக் குறியீடு Na ஆகும். .சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும் ,மெழுகு போன்ற தோற்றமும் ,வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது.
சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி C வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.சோடியம்,நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை.இதற்கு வரண்ட உப்புத் தூள் ,வறண்ட சோடா ,வறண்ட கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன் படுத்துகிறார்கள் .
ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள் . சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும் .வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாக(Coolant) பயன்படுத்த அனுகூலமாக யிருக்கிறது.
இதன் அணு எண் 11,அணு நிறை 22.99 ,அடர்த்தி 970 கிகி /கமீ .உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K,1156 K ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன்(Valency) 1 ஆக உள்ளது .
No comments:
Post a Comment