Saturday, April 7, 2012

arika ariviyal

உள்ளீடற்ற சிலை வடிக்கப் படும்போது அதில் ஒரு சிறு துளை ஒன்றை
விட்டு வைப்பார்கள்.ஏன் அப்படி?


உள்ளீடற்ற சிலைகளை பொதுவாக பீங்கான் மூலப்பொருட்களைக் கொண்டு
வார்க்கப்படுகின்றன.சிலைகளை மட்டுமின்றி,வீட்டு அலங்காரப் பொருட்கள்,
தட்டுகள்,கோப்பைகள்,பானைகள் போன்றவைகளை உற்பத்தி செய்யவும்
இம்மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றார்கள்.
பொதுவாக இளக்கமான பீங்கான் மூலப்பொருளை வார்ப்பில் வடித்து,சூட்டுலை
Oven)மூலம் பதப்படுத்தி கெட்டிப் படுத்துகின்றார்கள்.
உள்ளீடற்ற சிலை,சிறு துளை ஏதுமின்றி முழுமையாக மூடப்பட்டிருந்தால்
அதைப் பதப்படுத்தி கெட்டிப்படுத்த சூட்டுலையில் வைக்கும் பொது அதிலுள்ள
காற்று வெப்பஞ் சார்ந்த விரிவாக்கத்திற்கு உட்பட்டு சிலை விரிசலுக்கு ஆளாகி வெடித்து விடுகிறது.
பதப்படுத்திய பின்பு சிலையை குளிர்வூட்டும் பொது, உள்ளே உள்ள காற்று சுருங்குவதால்,உள் அழுத்தம் தாழ்வுருகிறது.
வெளி அழுத்தத்தின் தொடர்ந்த தாக்கத்தினால் சிலையில் வெடிப்பு ஏற்பட நேரிடலாம்.


இதை நாம் ஒரு சிறிய சோதனை மூலம் உறுதி செய்யலாம்.குறுகிய வாயுடன் கூடிய ஒரு குடுவையில், எரியும் காகிதத் துண்டை உள்ளிடவும்.
வெளிப்படும் புகையால்,உள்ளே உள்ள காற்று ஓரளவு வெளியேறி விடுகிறது. குடுவையின் வாயை தலைகீழாக ஒரு
நீர்தொட்டியில் வைக்க ஓரளவு நீர் உள்ளிழுக்கப் படுகிறது.
இது உள்ளே இருக்கும் அழுத்தக் குறைவால் ஏற்படும் விளைவாகும்.

No comments:

Post a Comment