அறிக அறிவியல்
ஓர் எறும்பு தன எடையை விட பல மடங்கு அதிகமான எடையைத் தூக்கிச் செல்கிறது.
ஆனால் அறிதிறன் மிக்க உயர்திணை மனிதர்களால் அப்படிச் செய்ய முடியவில்லையே .ஏன்
வண்ணத்துப் பூச்சி, ஈ ,தட்டான் ,கொசு ,கரப்பான் பூச்சி ,வெட்டுக் கிளி ,விட்டில் பூச்சி போல
எறும்பு பூச்சியினத்தைச் சேர்ந்தது. ஓர் எறும்பு தன் எடையைப் போல 50 மடங்கு எடையுள்ள
பொருளை தூக்கி எடுத்துச் செல்லக் கூடியது. இது சில சினிமாப் படத் தயாரிப்பாளர்கள் கற்பனையால்
படம் பிடித்துக் காட்டுவதைப் போல ,ஒரு மனிதன் ஒரு காரை த் தூக்குவதற்கு ஒப்பானது. அட்லஸ் ,
ஹெர்குலஸ் ,சூப்பர் மேன்,ஹல்க் ,அனுமன் போன்ற கற்பனைக் காதாபாத்திரங்களால் மட்டுமே இப்படிச்
செய்ய இயலும். இரு கால்களை உடைய எந்த மனிதனாலும் இப்படிச் செய்யவே முடியாது.
ஒரு கிராமிற்கும் குறைவான எடை யுடைய எறும்பு தான் பெற்றிருக்கின்ற ஆறு கால்களினால்
இத்தகைய செயல்களை வெகு இயல்பாகச் செய்கிறது.
இப்படி எறும்பு செய்ய அதன் ஒரு கிராம் உடல் எடைக்கு அதன் தசையின்(Muscle) இழுவிசைத் திறன்
குறைந்தது 20000 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்று கணித்துள்ளனர்.
தசையின் செயல் திறன் அதன் குறுக்கு வெட்டுப் பரப்பிற்கு ஏற்ப மாறுபடுகிறது .அதாவது அதன்
ஒற்றைப் பரிமாணத்தின் இருமடிக்கு ஏற்ப இருக்கிறது .உடலின் பருமன் அல்லது உடல் நிறை என்பது
ஒற்றைப் பரிமாணத்தின் மும்மடியைப் பொறுத்து மாறுபடுகிறது.எனவே சிறிய அளவிலான உடலுக்கு
அதன் தசைகள் ஒரளவு மிகவும் திறன் மிக்கவைகளாகும்.உடல் கூறியல் படி ,பூச்சிகளின் தசை
னார்கள் மிகவும் சிறியவை .அதனால் அவைகள் மிகவும் நெருக்கமாக திணிக்கப் பட்டிருக்கின்றன.
மனிதனின் தசைகளில் இல்லாத சில சிறப்புத் தன்மைகள் பூச்சிகளின் தசைகளில் உள்ளன.
தூண்டி ஊக்கமூட்டிக்கொள்வதால் இதன் தசைகளின் வலிமை அதிகமாக இருப்பதுடன்
களைப்பின்றி நெடு நேரம் ஏறும்பால் வேலை செய்யவும் முடிகிறது
No comments:
Post a Comment