Thursday, April 5, 2012

vethith thanimangal

வேதித் தனிமங்கள்


இயற்கை 92 வேதித் தனிமங்களை பருப்பொருளாக்கத்திற்காக உண்டாக்கி வைத்திருக்கிறது .மனிதர்கள் தங்கள் நுண்மதியால்
13 செயற்கைத் தனிமங்களைக் கண்டறிந்து உருவாக்கி உள்ளனர்.
என்றாலும் இவை இயற்கையில் எங்கும் காணப்படவில்லை.
ஒரு பொருள்,மணம்,சுவை, நிறமுள்ளதாக இருப்பினும் இல்லாவிட்டாலும் , உயிருள்ளதாக இருப்பினும் இல்லாவிட்டாலும் சிறிதானாலும்,
பெரிதானாலும் 92 தனிமங்களால் ஆனதுவே.அதன் தனிச் சிறப்புகள் பெரும்பாலும் அதிலுள்ள வேதித்தனிமங்களின் சேர்மான விகிதத்தைப் பொருத்தது. நுண்ணிய அளவு வேற்றுத் தனிமத்தின் சேர்மானம் கூட ஒரு பொருளின் பண்பில் பெருமளவு வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடியது

மனித உடல் முழுதும் வேதித் தனிமங்களின் சேர்க்கையாலானது.
வளர்சிதை மாற்றங்கள்யாவும் வேதி வினைகளின் விளைவுகளாகும்.இந்த
வேதி வினைகளை நிகழ்த்துவதற்கு உடலுக்குள் சுரக்கப்படும் நொதிமங்கள் யாவும் சிக்கலான மூலக் கூறுகளாகும்.எலும்பு,பற்களின் உறுதியைக் கால்சியமும்,இரத்தத்தின் பயன்பாட்டை இரும்பும்,நரம்பு மற்றும்
திசுக்களின் செயல் பாட்டை பொட்டாசியமும் ,இப்படி உடல்
நலத்திற்கு பல வேதித் தனிமங்கள் துணை செய்கின்றன.சத்துக்கள் ஆக்சிஜனேற்றம்(Oxsidation)பெறுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கின்றது.

92 தனிமங்களுள் 83 உலோகங்களாகும் .இவை உலோகப் பொலிவும்
அடித்துத் தகடாக்கப்படும் தன்மையும்,நேர் மின் அயனிகளை உண்டாக்கும் இயல்பும்,மின்சாரம் மற்றும் வெப்பம் கடத்தும் தன்மையும் கொண்டவை
உலோகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது.தொழில் துறை,எலெக்ட்ரானிக்ஸ்,மின்னியல்,போக்குவரத்து , செய்தித்தொடர்பு, வானவியல்,வேதியியல் மட்டுமின்றி ,தாவரவியல்,விலங்கியல்,மருத்துவம்,உடல் நலம் போன்ற துறைகளிலும் உலோகங்களின் பயன் பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது.உலோகங்களைக் கொண்டு கலப்பு உலோகங்களை(alloys) உருவாக்கி ,அதன் தன்மைகளை மாற்றி பயனுறு திறனை வெகுவாக உயர்த்தி
வருகிறார்கள்.இன்றைக்கு புதிய கண்டுபிடிப்புக்கள் ,தொழில்துறை சார்ந்த முன்னேற்றம்,மருத்துவமும் உடல் நலமும் போன்றவைகள் வேதித் தனிமங்களின் அறிவைச் சார்ந்திருக்கின்றன.எனவே உண்மையான
பொருளாதார எழுச்சி என்பது தடையில்லாதிருக்க வேண்டுமானால் 92
வேதித் தனிமங்கள் பற்றிய அறிவு மிகவும் அவசியம் .இத்தகைய முன்னுரையுடன் இனி வேதித் தனிமங்களைப் பற்றி - கண்டுபிடிப்பு, பண்புகள் , பயன்கள்- அறிந்து கொள்வோமே .

No comments:

Post a Comment