Friday, April 6, 2012

vinveliyil ulaa



நண்டு வடிவ நெபுலாவும் துடிப்பு விண்மீனும்

நண்டு வடிவ நெபுலாவில் உள்ள துடிப்பு விண்மீன் மிக விரைவாகத் துடிக்கும் விண்மீன்களுள் ஒன்றாகும்.இதன் மினுமினுப்பு 1/30 வினாடி என்ற அலைவு காலத்துடன் உள்ளது.துடிப்பின் இந்த விரைவான அலைவு
காலம் ,துடிக்கும் விண்மீன் பெற்றிருக்கும் இயல்புகளைப் பற்றித்
தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது .சீரான கால இடைவெளியுடன்
ஆன துடிப்பலை விரைவாகத் தற்சுழலும் விண்ணுறுப்பிலிருந்தே வர முடியும் .மேலும் வெடித்துச் சிதறாது வினாடிக்கு 30 முறையென விரைவாகத் தற்சுழலும் ஒரே விண்ணுறுப்பு நியூட்ரான் விண்மீனாகும்
neutron star).நியூட்ரான் விண்மீன் என்பது வெறும் நியூட்ரான்களால் ஆனது.


முதல் துடிப்பு விண்மீன் ரேடியோ அலை நீள நெடுக்கையில் இனமறியப் பட்டாலும் ,வேறு சில துடிப்பு விண்மீன்களில்,துடிப்பலைகளை வேறு அலை நீள நெடுக்கையிலும் காண முடிந்ததது.நண்டு வடிவ நெபுலா,கட்புலனறி அலைநீள நெடுக்கையில் இனமறியப்பட்ட,எக்ஸ் கதிரால் துடிப்பலை கொண்ட முதலாவது துடிப்பு மூலமாகும்.துடிப்பின் அலைவு நேரம் மாறாதிருப்பது போலத் தோன்றினாலும் ,நீண்ட காலப் போக்கில்,அதில் நுண்ணிய அளவு மாற்றம் ஏற்பட்டு தாமதப்படுகின்றது.துடிப்பலைகளை உருவாக்கத்
தேவையான ஆற்றல் சுழற்சி இயக்கத்திலிருந்தே
பெறுவதால் தற்சுழலும் நியூட்ரான் விண்மீனின் தற்சுழற்சி இயக்கம் காலப்போக்கில் மெதுவாகி விடுவதால்,இந்தத் தாமதம் விளைகிறது .
நண்டு வடிவ நெபுலாவி லுள்ள துடிப்பு விண்மீன் ஏறக் குறைய 900
ஆண்டுகள் பழமையானது .இது உண்மையில் எல்லாத் துடிப்பு விண்மீன்களுள்ளும் இளமையானது .ஒரு சில துடிப்பு விண்மீன்கள் பல மில்லியன் ஆண்டுகள் வயதானவைகளாக இருக்கின்றன.

நண்டுவடிவ நெபுலா விண்வெளியில் காணப்படும் பிறவற்றிலிருந்து இரு விதங்களில் மாறுபட்டதாக இருக்கின்றது.முதலாவது அதன் முந்தைய நிலையை பல ஆண்டுகளுக்கு முன்பும் ,சில காலஇடைவெளியில் விட்டுவிட்டு பல முறையும் எடுக்கப்பட்ட ஒளிப் படங்கள் ,அந்த நெபுலாவிலுள்ள துகள் எல்லாம்,ஏறக்குறைய 1300 கிமீ /வி என்ற வேகத்தில்
எல்லாத் திசைகளிலும் விரிவடைந்து சென்று கொண்டே இருக்கிறன என்பதைத் தெரிவித் துள்ளன .இது பிற நெபுலாக்களில் இருப்பதைவிட நூறு மடங்கு அதிகமானது .இதனால் நண்டு வடிவ நெபுலாவின் அடர்த்தி காலத்தால் மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இது விரிவாக்கத்தின் விளைவாகும் .இதன் விட்டம் சற்றேறக் குறைய 6 ஒளி ஆண்டுகளாகும் .
இரண்டாவது இதன் நிறமாலை,பிற நெபுலாக்கள் போல தொடர் நிறமாலையாக இருப்பினும்,அதில் பிரகாசமான அகன்ற இரட்டை வரிகளும் மேற் பொருந்தி இருக்கின்றன.இது நெபுலாவின் விரிவாக்கத்தை உறுதிப் படுத்துவதுடன்
அதில் ஹைட்ரஜன் மிகவும் குறைவாக இருப்பதையும்
தெரிவித்துள்ளது. நெபுலாவின் நேர்கோட்டுத் திசை வேகத்தையும் ,
கோணத் திசை வேகத்தையும் ஒப்பிட்டு அதன் தொலைவை 6500 ஒளி ஆண்டுகள் என மதிப் பிட்டுள்ளனர். நெபுலாவின் மையத்திலுள்ள
இரட்டை விண்மீனின் ஒளிர்திறனை மதிப்பிட இது துணை புரிகிறது.

இதன் விரிவாக்க வேகத்தைக் கொண்டு ,இது விரிவடையும் முன் எங்கிருந்து தொடங்கி இருக்கும் என்பதை ஒருவாறு கணக்கிட முடியும். நண்டு வடிவ நெபுலாவின் மையத்திலுள்ள இரு விண்மீன்களிலிருந்து
இந்த விரிவாக்கம் சுமார் 800 -900 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி இருக்க வேண்டும் என்பதை இது தெரிவிந்துள்ளது. இது 1054 AD யில் சீன வானவியலாரால் இனமறியப்பட்ட பிரகாசமான
விண்மீனைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.இதனால் நண்டு வடிவ நெபுலாவும்,அதன் மையத்திலுள்ள இரு விண்மீன்களும் சூப்பர் நோவா
(Super Nova) வின் எச்சம் என்று கருதப்படுகிறது.இதிலுள்ள ஒரு
சிறிய வடிவ விண்மீன் நியூட்ரான் விண்மீனாக இருக்கலாம் என்று வால்டர் பாடே(Walter Baade)என்பார் தெரிவித்த பொழுது 1968 வரை பலர் இதை மறுத்தனர். ஆனால் நண்டு வடிவ நெபுலாவின்
கதிர் வீச்சு மையம் ,வால்டர் பாடே குறிப்பிட்டுச் சொன்ன இடமாக இருந்தது .அதன் பிறகே கொள்கை
அளவில் இருந்து வந்த நியூட்ரான் விண்மீ னுக்கு சரியான எடுத்துக் காட்டு கிடைத்தது .

No comments:

Post a Comment