Saturday, April 14, 2012

arika ariviyal

அறிக அறிவியல்

வெடிக்கும் பலூன்



ஊதி உப்பிய பலூனை ஒரு குண்டூசியால் குத்த அது உடனடியாகச் சப்தத்துடன் வெடிக்கின்றது ஆனால் பலூனின் புறபரப்பில் ஒரு ஒட்டு நாடாவை (Cello Tape) ஒட்டி வைத்து விட்டு அவ்விடத்தில் குண்டூசியால் குத்த ,இப்போது முன்பு போல பலூன் வெடிப்பதில்லை ,ஆனால் காற்று மெதுவாக வெளியேறிச் செல்கிறது .இந்த வேறு பாட்டிற்கு காரணம் என்ன ?

பலூன் நீட்சியுறக் கூடிய மூலப்பொருளாலான இரப்பரால் செய்யப்பட்டது.
அதனால் பலூனை ஊதி உப்பச் செய்யும் போது நீட்சியுற்று விரிவடைகிறது. குண்டூசியால் குத்தும் போது பலூனின் புறப் பரப்பில் ஒரு சிறிய துளை ஏற்படுத்தப் படுகிறது. பலூனில் உள்ள காற்று அதிக அழுத்தத்தில் இருப்பதாலும்,துளையிட்ட பகுதியில் விறைப்புத் தன்மையில் குறைபாடு ஏற்படுவதாலும் ,சிறு துளையானது விரைவாகப் பெரிதாகி ,பலூனைக் கிழித்துவிடுகிறது.உள்ளே காற்று அழுத்தம் அதிகமாவும் துளை சிறிதாகவும் இருக்கும் போது வெடிப்புச் சத்தம் உரத்துக் கேட்கிறது.

அனால் பலூனின் புறப் பரப்பில் ஒரு ஒட்டு நாடாவை ஒட்டி விட்டு
அவ்விடத்தில் குண்டூசியால் குத்த , அப்பகுதி விறைப்புத் தன்மையை
இழந்துவிடுவதில்லை.அப் பகுதியின் விறைப்புத் தன்மையால் துளையும்
பெரிதாகி விரிவடைந்து கிழிந்து போவதில்லை.சாலையில் ஒரு கல் குத்த சைக்கிள் மற்றும் கார் வண்டிகளில் உள்ள டயர் வெடிப்பதும்
இதனால் தான் .

No comments:

Post a Comment