Friday, April 6, 2012

eluthaatha kaditham

ஐயா காந்தி அவர்களே நீங்கள் மீண்டும் பிறந்து வரமாட்டீர்களா?




வெண் ஜியாபோ சீனாவிற்கு விசுவாசியாக இருப்பதைப் போல
மகாதீர் மலேசியாவிற்கு விசுவாசியாக இருந்ததைப் போல
லி குவான் யூ சிங்கப்பூருக்கு விசுவாசியாக இருப்பதைப் போல
பெடரல் காஸ்ட்ரோ கியூபாவிற்கு விசுவாசியாக இருந்ததைப் போல
சான் சு கியூயி மியான்மருக்கு விசுவாசியாக இருப்பதைப் போல
நெல்சன் மண்டேலா தென்ஆப்ரிக்காவிற்கு விசுவாசியாக இருந்ததைப் போல
கோசி மின் வியட்நாமிற்கு விசுவாசியாக இருந்ததைப் போல
இன்றைக்கு இந்தியாவில் யாரும் இல்லையே என்ற கவலை
எனக்குள் எப்போதும் வருத்திக் கொண்டே இருக்கும் .
இந்தியாவெங்கும் தேடினாலும் அப்படிப்பட்டதொரு விசுவாசியைக்
காணமுடியவில்லை. ( நான் கண்ணை மூடிக் கொண்டேனா அல்லது
கண் கோளாறா ,என்னவோ தெரியவில்லை )

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு இப்படிப்பட்ட விசுவாசிகள் பலர்
இருந்தனர். மக்கள் வளமாக இல்லாவிட்டாலும் நலமாக வாழ்ந்தனர். விடுதலைக்குப்
பின் பலர் சிலராகிப் போயினர் .இன்றைக்கு அந்தச் சிலரும் கூட இல்லை
என்று சொல்லும் அளவிற்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது .அதனால்
இந்திய மக்கள் உறவு ,குடும்பம் எனக் கொண்டிருந்தாலும் ,சாகாத சமுதாயம்
என்னவோ அனாதையாகிக் கொண்டு வருகிறது.

இந்தியத் தலைவர்கள் மனதிற்குள் மக்களை இன்னும் அடிமைகளாகவே
பார்கின்றார்கள். முழு விடுதலை என்பது அவர்களுக்கு மட்டும் தானோ?
இந்த எண்ணம் அவர்களுடைய செயல்பாடுகளில் அவ்வப்போது வெளிப்பட்டுத்
தோன்றுகிறது .அதனால் அவர்கள் தொண்டு செய்வதற்கும்,சேவை
புரிவதற்கும் தேவையான தன்மையை மறந்து விட்டு தன்னலத்தோடு
செயல்படுகிறார்கள் .கனிவு என்பது கானல் நீர் போல காட்சி தருகிறது.
அதிகாரத் திமிர் அவர்களுடைய செயல்பாட்டில்அவ்வப்போது வெளிபடுவதிலிருந்து இதை உறுதி செய்யலாம் .

நாட்டிற்காகத்தான் அரசியலும் ஆட்சியுமே ஒழிய அரசியலுக்கும் அரசுக்கும்
ஒரு நாடு அமைவதில்லை, என்பதை எப்போது நம்மவர்கள் புரிந்தவர்கள்
போல நடிக்காமல் உண்மையாகவே உள்வாங்கிக் கொள்ளப்
போகின்றார்களோ,தெரியவில்லை .

அரசியலில் மாற்றம் வேண்டாம் ,அரசியல் தலைவர்களிலும் மாற்றம்
வேண்டாம் .ஆனால் அவர்களின் மனதில் தான் மாற்றம் ஏற்பட வேண்டும் .
இல்லாவிட்டால் இந்தியா இன்னும் கொஞ்ச காலத்தில் ஆதரவில்லாத
அனாதையாகத்தான் வளர வேண்டிய சூழ் நிலை ஏற்படும் .

இந்தியாவிற்கு தாய் நாட்டின் சிந்தனை இல்லாத தலைவர்கள் வேண்டாம் .
அவர்களை கதாநாயகர்களாக ஆக்கும் அடி வருடிகளும் வேண்டாம்
அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக உருவாகும் தீவிரவாதிகளும் வேண்டாம்
அவர்களைப் போல வாழ நினைத்து முடியாமல் உருவான கொள்ளைக் காரர்களும் வேண்டாம்



நம் நாடு, நம் மக்கள் என நாட்டின் நலத்தையே முதன்மைக் குறிக்கோளாகக்
கொண்டு செயல்படக் கூடிய நல்ல தலைவர்களே இனி இந்தியாவுக்கு வேண்டும் .அதற்கு அறிவும் ஆற்றலும், திட சிந்தனையும் ,தையிரியமும் ,தன்னலமின்மையும்
நடுவு நிலையும் கொண்ட மகாத்மா காந்தி போன்ற ஒரு உன்னதமான தலைவர் பிறந்து வரவேண்டும் .
ஐயா காந்தி அவர்களே ,நீங்கள் இந்திய மண்ணில் மீண்டும் பிறந்து திக்கற்ற
எங்களுக்கெல்லாம் வழிகாட்டும் ஒரு தலைவராக வரமாட்டீர்களா ?

No comments:

Post a Comment