creative thoughts
கேட்டவை
எனக்கு இலக்கியத்தில் அதிக ஈடுபாடு இல்லை. சமீபத்தில் ஒரு நாள் காரைக்குடியில் மாதாமாதம் நடைபெறும் கம்பன் கருத்தரங்கச் சொற்பொழிவுக்கு நண்பருடன் சேர்ந்து கேட்கும் கட்டாயம் ஏற்பட்டது .அப்போது சொற்பொழிவாளர் ஒரு கதையைக் கூறினார்.
" கம்ப ராமாயணச் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் போது இடையில் சொற்பொழிவாளர் அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
ராமாயணத்தில் உங்களுக்குப் பிடித்த காதாபாத்திரம் யார் ?
சிலர் ராமன் என்றும் ,சிலர் இலக்குவன் என்றும் ,வேறு சிலர் விபிஷணன் என்றும் பலவாறாகக் கூறினார். அப்போது ஒருவர் எழுந்து எனக்குப் பிடித்த கதாபாத்திரம் தசரதன் என்று கூற சொற்பொழிவாளர் அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போனார்.
ஏன் உங்களுக்கு தசரதனை மிகவும் பிடித்திருக்கின்றது என்று கேட்க பார்வையாளரும் இப்படிக் கூறினார்.
இராமன் ஏக பத்தினி விரதன். இருந்தும் தன்னுடைய ஒரே மனைவியான சீதையை சந்தேகப்பட்டான் . அதனால் அவள் தீக்குழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . இது இல்வாழ்கைக்குச் சிறப்பு இல்லை. ஆனால் தசரதன் ஆயிரம் மனைவி மார்களைக் கொண்டவன் என்று கூறுவார்கள் .அது உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது .ஆனால் அவர் தன் மனைவிகளில் யாரையும் சந்தேகப் படவில்லை என்பது மட்டும் தெரியும் . என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்,
கணவன்- மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அடிப்படையான புரிதல் என்பது தசரதனிடம் இருந்தது, இராமனிடம் இல்லை.அதனால் எனக்குத் தசரதனைப் பிடிக்கும் என்று கூற அவையோர் அனைவரும்
இதைக் கேட்டு ரசித்தனர்.இக் கருத்து ஏற்புடையதாக இருந்ததோ இல்லையோ சொற்பொழிவாளர் இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்க வில்லை
.
No comments:
Post a Comment