Tuesday, April 3, 2012

eluthaatha kaditham

உழைப்பை பயன் படுத்திக்கொள்ளாத இந்தியா

இந்தியா உண்மையில் வளம் மிக்க ஒரு நாடு.ஆனால் இன்றைக்கு
இந்திய மக்கள் தாய் நாட்டின் வளத்தை சரியாக அறியாது முறையாக
பயன் படுத்திக் கொள்ளத் தெரியாது வாழ்ந்து வருகிறார்கள்
உழைத்து வாழவேண்டும் என்ற உணர்வு மங்கிக் கொண்டே வருகிறது .
உழைக்காமல் உயரவேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைக்கு
அதிகமாகிக் கொண்டே வருகின்றார்கள்.இவர்கள் எப்போதும்
தவறான வழியையே பின்பற்றுகிறார்கள்.இதன் தாக்கம்
சமுதாயத்தில் மெதுவாக ஊடுருவுவதை இவர்கள் அறியாததாலும்
அல்லது அதிப்பற்றி கவலைப் படாததாலும் அதை ஒருபோதும் மாற்றி
அமைக்க முடியாதவாறு நிலைப்பட்டு விடுகிறது.உடனடிப் பாதிப்பை விட
தாமதமாக நிலைப்படும் இப் பாதிப்பு மிகவும் கொடூரமான தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடியது.நான் இதைக்கண்டே மிகவும் வருத்தப் படுகிறேன்.

இந்திய மக்கள் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்ந்த போது
எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.அந்நியர்களின் ஆதிக்கத்தில்
கட்டுண்டு இருந்த போது கூட இந்த மகிழ்ச்சி இருந்தது.எல்லோரும் எதோ
ஒரு வேலை இருந்தது.வேலை இல்லாதவர்கள் மக்களுக்கு உதவி செய்து
பிழைத்து வந்தனர்.அதனால் அவர்களுக்கு வேற்றுச் சிந்தனைகள் இல்லாதிருந்தது .
ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை.பெரும்பாலான மக்கள்
வேலை இல்லாமல் இருக்கின்றார்கள் ,அல்லது வேலையிலிருந்தும் வேலை
செய்யாமல் இருக்கின்றார்கள். இதை கண்காணிக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு
ஆட்சியாளர்களிடமே இருக்கிறது.அவர்களே கண்காணிக்கப் படாத போது
அவர்கள் மக்களைக் கண்காணிப்பது என்பது அவர்களுடைய திறமைக்கும்
தகுதிக்கும் அப்பாற்பட்ட ஒரு பணியாக தோற்றம் தருகிறது.
இந்தியா எதிர்காலச் சவால்களை எல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால்
இந்த நிலையில் பெருத்த மாற்றம் ஏற்படவேண்டும்.இல்லாவிட்டால்
இது வெறும் வெற்றுப் பேச்சாகவும்,மக்களை மக்களே ஏமாற்றி பயனீட்டிக்
கொள்ளும் வழிமுறையில் தடையை ஏற்படுத்த உள்ளார்ந்த விருப்பம்
இல்லா நிலையாகவும் இருக்கும் .

No comments:

Post a Comment